Ashoka chakra
National Apprenticeship Training Scheme Instituted by BOATs/BOPT under MHRD
Ashoka chakra

தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம்

Ministry of Education, Government of India

எங்களைப் பற்றி - வடக்கு மண்டலம்

தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் வடக்கு மண்டல அலுவலகம் கான்பூரில் 1970-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1973-ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட) தொழில் பழகுநர் சட்டப்படி 1973- ஆம் ஆண்டு முதல் பொறியியலில் பட்டம் / பட்டயப்படிப்புப் படித்தவர்களின் தொழில் பழகுநர் பயிற்சி 1961-ஆம் ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிச் சட்டத்தின் நோக்க வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 1986ல், 1961-ஆம் ஆண்டின் தொழில் பழகுநர் சட்டத்தில் அவ்வப்போது கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களின் படி, மேல்நிலை (10+2) தொழிற்பாடப் பிரிவில் பயின்றவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சியும் இச்சட்டத்தின் நோக்க வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் இவ்வாரியம் உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவ்வப்போது கொண்டு வரப்படும் சட்டத்திருத்தங்களுக்கு ஏற்ப 1961-ஆம் ஆண்டின் தொழில் பழகுநர் சட்டப்படி தொழில் பழகுநர் பயிற்சித்திட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்டது.

இச்சட்டம் பட்டதாரி, தொழில்நுட்ப வல்லுநர் (பட்டயம் பெற்றவர்) தொழில்நுட்ப வல்லுநர் (தொழில் கல்வி) தொழில் பழகுநர் என்பவரை 'பொறியியல் / தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் / பட்டயம் பெற்றவர் அல்லது அரசாங்கம் / அகில இந்திய தொழிற்நுட்பக் கல்விக்கழகம் (AICTE) ஒப்புக்கொண்ட 10+2 தேர்ச்சி சான்றிதழ் வைத்திருந்து தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர் அல்லது பெற்றுக் கொண்டிருப்பவர்' என வரையறுக்கிறது. இச்சட்டத்தின் கீழ் இவ்வாரியத்தில் உள்ள அதிகாரிகள், தொழில் பழகுதல் ஆலோசகர்கள் என அழைக்கப்படுவர். இவ்வாலோசகர்கள், மைய அரசுத் துறைகள், மைய அரசு பொறுப்பேற்பு (undertaking) நிறுவனங்கள், மாநில அரசுத் துறைகள், மாநில அரசு பொறுப்பேற்பு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பெறுவோர் (பட்டதாரி / பட்டயம் பெற்ற பொறியாளர் மற்றும் 10+2 மேல்நிலையில் தொழிற்கல்வி பயின்றோர்) எனத் துறைவாரியாக உள்ள காலியிடங்களை அறிவிக்கை செய்வார்கள். பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்ற தொழில்நுட்பவியலாளர், மேல்நிலையில் தொழிற்கல்வி பயின்ற தொழில்நுட்ப வியலாளர்கள் அனைவருக்கும் இச்சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உதவித்தொகை வழங்கப்படும். தொகையில் 50% மையஅரசால், வேலையளிப்பவர் களுக்குத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் வழியாக ஈடு செய்யப்படும்.

இச்சட்டத்தின்படி தொழில் பழகுநர் பயிற்சிக்காலம் ஓராண்டாகும். இப்பயிற்சியின் தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் / ஜுலை மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே வேலையளிப்போர் புதிய தொழில் பழகுநர்களைப் பணியமர்த்திட வேண்டும். பயிற்சி முடித்த பிறகு வேலைவாய்ப்புக்கான உறுதி எதுவும் இல்லை. இவ்வொப்பந்தம், குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பாக முடிவுக்குக் கொண்டு வரப்படின் அதற்குப் பொறுப்பானவர் யாரோ அவர் உரிய இழப்பீட்டை வழங்கிடல் வேண்டும். எனினும் தொழில் பழகுநருக்கு லாபகரமான வேலை கிடைப்பதன் காரணமாகவோ மருத்துவ காரணங்களின் அடிப்படையிலோ ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுமாயின் இழப்பீடு அளிப்பது என்ற நிபந்தனை கைவிடப்படும்.

வாரியத்தின் நோக்கங்கள்:   சங்கங்களின் பதிவுச் சட்டப் (1960) படி பதிவு செய்துள்ள வடக்கு மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரிய சங்கப் பொதுநிலை அறிக்கையில் வாரியத்தின் நோக்கங்களாக குறிப்பிட்டுள்ளவை:

  1. உத்திர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி தேசிய தலைநகர நிலப்பகுதி, புதுச்சேரி, யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நிரந்தரமான பிணைப்பு ஒன்று வடக்கு மண்டலத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே நிறுவுதல் வேண்டும்.
  2. மைய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளில் மேல்நிலை பயின்றோர் பயிற்சி பெறுவதற்கான வசதிவாய்ப்புகளை உறுதி செய்தல்.
  3. தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்பி விண்ணப்பித்தவர்களில் உரியவர்களை தெரிந்தெடுத்தல்..
  4. பயிற்சி பெற விரும்புவோர், தொழிற்சாலைகள், பிறமுகமைகள் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்து பயிற்சிபெறுவோர்க்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குதல்.
  5. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிகளை வாரியத்தால் இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் மேற்பார்வையிடல்.
  6. தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பிறமுகமைகள் ஆகியவற்றில் செய்முறைப் பயிற்சி தொடர்பாக ஆலோசனைகள் வேண்டுவோர்க்கு வழங்குதல்.
  7. செய்முறைப் பயிற்சியின் பல்வேறு கூறுகளை ஆவணப்படுத்தும் விதமாக பாடநூல்கள் உருவாக்குவதற்குப் பொறுப்பேற்றல்.
  8. விரிவுரைகள், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகத் தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்முறைப் பயிற்சியின் பல்வேறு கூறுகள் பற்றிய தகவல்களைப் பரப்பச் செய்தல்.
  9. பயிற்சிப் படிப்புகளை வெற்றிகரமாக முடித்தோருக்குப் பொருத்தமான சான்றிதழ்கள் வழங்குதல்.
  10. உதவித்தொகைகள், படிப்புதவித் தொகை, ஆதரவு ஊதியம், பரிசுகள், பதக்கங்கள் போன்றவற்றை விதிமுறைகளின்படி உருவாக்கி வழங்குதல்.
  11. அவ்வப்போது இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளபடி உதவித்தொகை மற்றும் பிற தொகைகள் பயிற்சியாளர்களிடையே விநியோகித்தல்.
  12. கையேடுகள், இதழ்கள், பருவ இதழ்கள், விளம்பரங்கள் போன்றவற்றை இச்சங்கத்தின் நோக்கங்களை மேம்படுத்தும் நோக்கமுடன் விரும்பத்தக்க முறையில் அச்சடித்து வெளியிடல்.
  13. இச்சங்கத்தின் துணை விதிகளில் உள்ளவாறான கட்டணங்களையும் பிறதொகைகளையும் நிர்ணயம் செய்து அவற்றைப் பெறுதல்.
  14. இச்சங்கம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப பல்வேறு முகமைகளுக்கு அளிக்கப்படும் பணிகள், தொழில்நுட்ப ஆலோசனை போன்றவற்றிற்குப் பொருத்தமான கட்டணங்களை நிர்ணயம் செய்து அவற்றை வசூல் செய்தல்.
  15. சட்டப்படி இவ்வாரியத்திற்கு அளிக்கப்படும் அதிகாரங்களின் எல்லைக்குட்பட்டு 1973 & 1986ம் ஆண்டு திருத்தப்பட்ட 1961-ஆம் ஆண்டு தொழில் பழகுநர் சட்டத்தில் உள்ள நிபந்தனைகளின் செயல்பாட்டை (பொறியியல் பட்டதாரி, தொழில்நுட்ப வல்லுநர், தொழில்நுட்பவியலாளர், தொழிற்பாடப்பிரிவு பயின்றோர்க்கான பயிற்சியை பொறுத்த அளவில்) நடைமுறைப்படுத்தல்.
  16. தொழில் பழகுநர் ஆலோசகர் மற்றும் நடுவண் தொழில் பழகுநர் போன்றோருக்கு உரிய ஆலோசனை வழங்குதல்.
  17. Tபணியாளர் பணி விதிகள் மற்றும் ஆள்சேர்ப்பு விதிகளின்படி வாரியமும் இந்திய அரசு அளிக்கும் ஒப்புதலுக்கு ஏற்பப் பொருத்தமான நிறைவளிக்கும்படியான செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்யப் போதுமான நிர்வாக, தொழில்நுட்ப அமைச்சகப் பணியாளர்கள் மற்றும் பிற பதவிகளை உருவாக்குவதுடன், பொருத்தமானவர்களை அப்பணியிடங்களில் நியமித்தல்.

மேற்கண்ட நோக்கங்களை அடைவதற்குரிய பொருத்தமான செயல்களை மேற்கொள்ளுதல்.

மக்கள்

Southern Region Logo
திரு விஜய் சங்கர் பாண்டே
இயக்குனர், BOAT (SR)
Western Region Logo
திரு பி. என். ஜூம்லே
இயக்குனர், BOAT (WR)
Eastern Region Logo
திரு இஜாஸ் அகமது
இயக்குனர், BOPT (ER)
Northern Region Logo
திரு எஸ். கே. மேத்தா
இயக்குனர், BOAT (NR)

National Apprenticeship Training Scheme (NATS) portal provides a platform for various stakeholders like Students, Establishments and Institutions to leverage the Apprenticeship training programme.

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

Copyright © 2024 NATS. All Rights Reserved.