தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் ஏன்?

மாணவர் - தே.தொ.ப.ப.தி ஏன்?

தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம், மைய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மாணவர்கள் ஒரு சிறந்த பயிற்சிபெற வாய்ப்பளிக்கிறது. பொறியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது மேல்நிலைப் (+2) படிப்பின் தொழிற்கல்விப் பிரிவில் தகுதி பெற்றவர் எவரும் தே.தொ.ப.ப.தி. வலைத்தள நுழைவு வாயிலில் பதிவு செய்து கொண்ட பிறகு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தோர்க்கு 126 பாடப் புலங்களிலும், மேல்நிலை (+2) தொழில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 128 பாடப் புலங்களிலும் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சிக்காலம் ஓராண்டு. பயிற்சிக் காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகையில் 50 விழுக்காட்டினை வேலை யளிப்பவருக்கு மையஅரசு திருப்பிச் செலுத்தும். மாணவர்கள் தொழில் பழகுநர் பயிற்சிக்கு, தே.தொ.ப.ப.தி. வலைத்தள நுழைவாயில் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகளுக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமாயின் அவ்வப்போது நடத்தப்படும் தொழில் பழகுநர் கண்காட்சி / சந்தைகளில் பங்கெடுக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தொழில் பழகுநர் பயிற்சிக்காகத் தொழில் பழகுநர்களைத் தேர்ந்தெடுப்பது வேலையளிப்பவரின் விருப்புரிமையாகும்.

மாணவர்கள் பெறும் நன்மைகளுள் சில:

  • வேலை கிடைத்தல்
  • தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பித்தல்
  • வேலைவாய்ப்புக்கான குறிப்புகளைச் சேகரித்தல்
  • indiagovt 
  • datagovt 
  • dialgovt 

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

பதிப்புரிமை © 2015 NATS . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.